பெருமை — அதிகாரம் 98
Greatness பெருமை
குறள்கள்
- குறள் 971 — ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற்கு அஃதிறந்து வாழு மெனல்
- குறள் 972 — பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்
- குறள் 973 — மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங் கீழல்லார் கீழல்ல வர்
- குறள் 974 — ஒருமை மகளிரே போலப் பெருமையுந் தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு
- குறள் 975 — பெருமை யுடைய ராற்றுவா ராற்றி னருமை யுடைய செயல்
- குறள் 976 — சிறியா ருணர்ச்சியு ளில்லை பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னு நோக்கு
- குறள் 977 — இறப்போ ரிருந்த தொழிற்றாஞ் சிறப்புந்தான் சீரல் லவர்கட் படின்
- குறள் 978 — பணியுமா மென்றும் பெருமை சிறுமை அணியுமாந் தன்னை வியந்து
- குறள் 979 — பெருமை பெருமித மின்மை சிறுமை பெருமித மூர்ந்து விடும்
- குறள் 980 — அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும்