திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

நல்குரவு — அதிகாரம் 105

பொருட்பால் · ஒழிபு இயல்

Poverty வறுமையின் கொடுமை

குறள்கள்

  1. குறள் 1041 — இன்மையி னின்னாத தியாதெனி னின்மையின் இன்மையே யின்னா தது.
  2. குறள் 1042 — இன்மை யெனவொரு பாவி மறுமையும் இம்மையும் மின்றி விடும்
  3. குறள் 1043 — தொல் வரவும் தோலும் கெடுக்கும், தொகையாக- நல்குரவு என்னும் நசை
  4. குறள் 1044 — இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த சொல்பிறக்குஞ் சோர்வு தரும்
  5. குறள் 1045 — நல்குரவு வென்னு மிடும்பையுட் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்
  6. குறள் 1046 — நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்
  7. குறள் 1047 — அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்
  8. குறள் 1048 — இன்றும் வருவது கொல்லோ நெருநலுங் கொன்றது போலு நிரப்பு
  9. குறள் 1049 — நெருப்பினுள் துஞ்சலு மாகு நிரப்பினுள் யாதொன்றுங் கண்பா டரிது
  10. குறள் 1050 — துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்குங் காடிக்குங் கூற்று
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural