நாண் உடைமை — அதிகாரம் 102
Nicety நாணம் சிறந்த அணிகலன்
குறள்கள்
- குறள் 1011 — கருமத்தா னாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற
- குறள் 1012 — ஊணுடை யெச்சம் முயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு
- குறள் 1013 — ஊனைக் குறித்த துயிரெல்லாம் நாணென்னு நன்மை குறித்தது சால்பு
- குறள் 1014 — அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற் பிணியன்றோ பீடு நடை
- குறள் 1015 — பிறர்பழியுந் தம்பழிபோல் நாணுவார் நாணுக் குறைபதி யென்னு முலகு
- குறள் 1016 — நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர்
- குறள் 1017 — நாணா லுயிரைத் துறப்ப ருயிர்ப்பொருட்டால் நாண்டுறவார் நாணாள் பவர்
- குறள் 1018 — பிறர்நாணத் தக்கது தானாணா னாயின் அறநாணத் தக்க துடைத்து
- குறள் 1019 — குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பி னலஞ்சுடு நாணின்மை நின்றக் கடை
- குறள் 1020 — நாணகத் தில்லா ரியக்கம் மரப்பாவை நாணா லுயிர்மருட்டி யற்று