திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

மானம் — அதிகாரம் 97

பொருட்பால் · ஒழிபு இயல்

Honour மானம்

குறள்கள்

  1. குறள் 961 — இன்றி யமையாச் சிறப்பின் வாயினுங் குன்ற வருப விடல்
  2. குறள் 962 — சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர்
  3. குறள் 963 — பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டு முயர்வு
  4. குறள் 964 — தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர் நிலையி னிழிந்தக் கடை
  5. குறள் 965 — குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ குன்றி யனைய செயின்
  6. குறள் 966 — புகழின்றாற் புத்தேணாட் டுய்யாதா லென்மற்று இகழ்வார்பின் சென்று நிலை
  7. குறள் 967 — ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலி னந்நிலையே கெட்டா னெனப்படுத னன்று
  8. குறள் 968 — மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து
  9. குறள் 969 — மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா ருயிர்நீப்பர் மானம் வரின்
  10. குறள் 970 — இளிவரின் வாழாத மான முடையா ரொளிதொழு தேத்து முலகு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural