குடி செயல் வகை — அதிகாரம் 103
Social Service குடிப்பெருமை காக்க..
குறள்கள்
- குறள் 1021 — கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும் பெருமையிற் பீடுடைய தில்
- குறள் 1022 — ஆள்வினையு மான்ற வறிவு மெனவிரண்டின் நீள்வினையா னீளுங் குடி
- குறள் 1023 — குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்
- குறள் 1024 — சூழாமற் றானே முடிவெய்துங் தங்குடியைத் தாழா துஞற்று பவர்க்கு
- குறள் 1025 — குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்று முலகு
- குறள் 1026 — நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை யாக்கிக் கொளல்
- குறள் 1027 — அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து மாற்றுவார் மேற்றே பொறை
- குறள் 1028 — குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்
- குறள் 1029 — இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பா னுடம்பு
- குறள் 1030 — இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்று நல்லா ளிலாத குடி