திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

தெரிந்து வினையாடல் — அதிகாரம் 52

பொருட்பால் · அரசு இயல்

Employment தெரிந்து வினையாடல்

குறள்கள்

  1. குறள் 511 — நன்மையுயந் தீமையு நாடி நலம்புரிந்த தன்மையா னாளப் படும்
  2. குறள் 512 — வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை யாராய்வான் செய்க வினை
  3. குறள் 513 — அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்கு நன்குடையான் கட்டே தெளிவு
  4. குறள் 514 — எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகு மாந்தர் பலர்
  5. குறள் 515 — அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று
  6. குறள் 516 — செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ டெய்த வுணர்ந்து செயல்
  7. குறள் 517 — இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந் ததனை யவன்கண் விடல்
  8. குறள் 518 — வினைக்குரிமை நாடிய பின்றை யவனை யதற்குரிய னாகச் செயல்
  9. குறள் 519 — வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்குந் திரு
  10. குறள் 520 — நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural