திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

தெரிந்து தெளிதல் — அதிகாரம் 51

பொருட்பால் · அரசு இயல்

Selection தெரிந்து தெளிதல்

குறள்கள்

  1. குறள் 501 — அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின் றிறந்தெரிந்து தேறப் படும்
  2. குறள் 502 — குடிப்பிறந்து குற்றத்து னீங்கி வடுப்பரியு நாணுடையான் கட்டே தெளிவு
  3. குறள் 503 — அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா லின்மை யரிதே வெளிறு
  4. குறள் 504 — குணம்நாடிக் குற்றமு நாடி யவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்
  5. குறள் 505 — பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல்
  6. குறள் 506 — அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி
  7. குறள் 507 — காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல் பேதைமை யெல்லாந் தரும்
  8. குறள் 508 — தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா விடும்பை தரும்
  9. குறள் 509 — தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபிற் றேறுக தேறும் பொருள்
  10. குறள் 510 — தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந் தீரா விடும்பை தரும்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural