திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

சிற்றினம் சேராமை — அதிகாரம் 46

பொருட்பால் · அரசு இயல்

Mean Company சிற்றினஞ்சேராமை

குறள்கள்

  1. குறள் 451 — சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்
  2. குறள் 452 — நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க் கினத்தியல்ப தாகு மறிவு
  3. குறள் 453 — மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா மின்னா னெனப்படுஞ் சொல்
  4. குறள் 454 — மனத்து ளதுபோலக் காட்டி யொருவற் கினத்துள தாகு மறிவு
  5. குறள் 455 — மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு மினந்தூய்மை தூவா வரும்
  6. குறள் 456 — மனந்தூயார்க் கெச்சம்நன் றாகு மினந்தூயார்க் கில்லைநன் றாகா வினை
  7. குறள் 457 — மனநல மன்னுயிர்க் காக்க மினநல மெல்லாப் புகழும் தரும்
  8. குறள் 458 — மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநல மேமாப் புடைத்து
  9. குறள் 459 — மனநலத்தி னாகு மறுமைமற் றஃது மினநலத்தி னேமாப் புடைத்து
  10. குறள் 460 — நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி னல்லற் படுப்பதூஉ மில்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural