பொச்சாவாமை — அதிகாரம் 54
Slackness மறதியை விலக்கல்
குறள்கள்
- குறள் 531 — இறந்த வெகுளியிற் றீதே சிறந்த வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு
- குறள் 532 — பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு
- குறள் 533 — பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுலகத் தெப்பானூ லோர்க்குந் துணிவு
- குறள் 534 — அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு
- குறள் 535 — முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை பின்னூ றிரங்கி விடும்
- குறள் 536 — இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை வாயி னஃதொப்ப தில்
- குறள் 537 — அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின்
- குறள் 538 — புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில்
- குறள் 539 — இகழ்ச்சியிற் கெட்டாரை யெண்ணுக தாந்த மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
- குறள் 540 — உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா னுள்ளிய துள்ளப் பெறின்