பெரியாரைத் துணைக்கோடல் — அதிகாரம் 45
Elders’ Help பெரியோர் நட்பு
குறள்கள்
- குறள் 441 — அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்
- குறள் 442 — உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்
- குறள் 443 — அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்
- குறள் 444 — தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை
- குறள் 445 — சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
- குறள் 446 — தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில்
- குறள் 447 — இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர்
- குறள் 448 — இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்
- குறள் 449 — முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை
- குறள் 450 — பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்