குறள் 449 — பெரியாரைத் துணைக்கோடல்
பொருட்பால் · அரசு இயல் · பெரியாரைத் துணைக்கோடல்
குறள்
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை
பொருள்
வைப்புப் பொருள் இல்லாதவர்க்கு மேல் வருவாய் இல்லை; அது போல், பெரியவர் துணை இலார்க்கு நிலை இல்லை.