ஊக்கம் உடைமை — அதிகாரம் 60
Energy ஊக்கம் உடைமை
குறள்கள்
- குறள் 591 — உடைமை யெனப்படுவ தூக்கமஃ தில்லா ருடைய துடையரோ மற்று
- குறள் 592 — உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்
- குறள் 593 — ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்க மொருவந்தங் கைத்துடை யார்
- குறள் 594 — ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா வூக்க முடையா னுழை
- குறள் 595 — வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம் முள்ளத் தனைய துயர்வு
- குறள் 596 — உள்ளுவ தெல்லா முயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
- குறள் 597 — சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு
- குறள் 598 — உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து வள்ளிய் மென்னுஞ் செருக்கு
- குறள் 599 — பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்
- குறள் 600 — உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார் மரமக்க ளாதலே வேறு