திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

கொடுங்கோன்மை — அதிகாரம் 56

பொருட்பால் · அரசு இயல்

Misrule கொடுங்கோன்மை

குறள்கள்

  1. குறள் 551 — கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யலைமேல்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து
  2. குறள் 552 — வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங் கோலொடு நின்றா னிரவு
  3. குறள் 553 — நாடொறு நாடி முறைசெய்யா மன்னவ னாடொறு நாடு கெடும்
  4. குறள் 554 — கூழும் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச் சூழாது செய்யு மரசு
  5. குறள் 555 — அல்ல்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
  6. குறள் 556 — மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேல் மன்னாவா மன்னர்க் கொளி
  7. குறள் 557 — துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த னளியின்மை வாழு முயிர்க்கு
  8. குறள் 558 — இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின்
  9. குறள் 559 — முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி யெல்லாது வானம் பெயல்
  10. குறள் 560 — ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural