கல்லாமை — அதிகாரம் 41
Ignorance படிக்காமையால் வரும் இழிவு
குறள்கள்
- குறள் 401 — அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்
- குறள் 402 — கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று
- குறள் 403 — கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற் சொல்லா திருக்கப் பெறின்
- குறள் 404 — கல்லாதா னொட்பங் கழியநன் றாயினும் கொள்ளா ரறிவுடை யார்
- குறள் 405 — கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்
- குறள் 406 — உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக் களரனையர் கல்லா தவர்
- குறள் 407 — நுண்மா ணுழைபுல மில்லா னெழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று
- குறள் 408 — நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே கல்லார்கட் பட்ட திரு
- குறள் 409 — மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு
- குறள் 410 — விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல் கற்றாரோ டேனை யவர்