கேள்வி — அதிகாரம் 42
Hearing கேள்வி
குறள்கள்
- குறள் 411 — செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை
- குறள் 412 — செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கு மீயப் படும்
- குறள் 413 — செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி னான்றாரோ டொப்பர் நிலத்து
- குறள் 414 — கற்றில னாயினுங் கேட்க வஃதொருவன் ஒற்கத்துக்கு கூற்றாந் துணை
- குறள் 415 — இழுக்க லுடையுழி யூற்றுகோ லற்றே யொழுக்க முடையார்வாய்ச் சொல்
- குறள் 416 — எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு மான்ற பெருமை தரும்
- குறள் 417 — பிழைத்துணர்த்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர்
- குறள் 418 — கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற் றோட்கப் படாத செவி
- குறள் 419 — நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது
- குறள் 420 — செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க ளவியினும் வாழினு மென்