வினைத் தூய்மை — அதிகாரம் 66
Honest Dealing நெறிபிறழாத செயல்
குறள்கள்
- குறள் 651 — துணைநல மாக்கந் தரூஉம் வினைநலம் வேண்டிய வெல்லாந் தரும்
- குறள் 652 — என்று மொருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை
- குறள் 653 — ஓஒதல் வேண்டும் மொளிமாழ்குஞ் செய்வினை யாஅது மென்னு மவர்
- குறள் 654 — இடுக்கட் படினு மிளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்
- குறள் 655 — எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேன் மற்றன்ன செய்யாமை நன்று
- குறள் 656 — ஈன்றான் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை
- குறள் 657 — பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை
- குறள் 658 — கடிந்த கடிந்தொரார் செய்வார்க் கவைதா முடிந்தாலும் பீழை தரும்
- குறள் 659 — அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும் பிற்பயக்கு நற்பா லவை
- குறள் 660 — சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துணீர் பெய்திரீஇ யற்று