வரைவு இல் மகளிர் — அதிகாரம் 92
Public Women பொருள் தேடும் பொது மகளிர்
குறள்கள்
- குறள் 911 — அன்பின் விழையார் பொருள்விழையு மாய்தொடியா ரின்சொ லிழுக்கந் தரும்
- குறள் 912 — பயன்றூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்றூக்கி நள்ளா விடல்
- குறள் 913 — பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ யற்று
- குறள் 914 — பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு ளாயு மறிவி னவர்
- குறள் 915 — பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட வறிவி னவர்.
- குறள் 916 — தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள்
- குறள் 917 — நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள்
- குறள் 918 — ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப மாய மகளிர் முயக்கு
- குறள் 919 — வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் பூரியர்க ளாழு மளறு
- குறள் 920 — இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு