உட்பகை — அதிகாரம் 89
The Enemy Within உட்பகை
குறள்கள்
- குறள் 881 — நிழனீரு மின்னாத வின்னா தமர்நீரும் இன்னாவா மின்னா செயின்
- குறள் 882 — வாள்போல் பகைவரை அஞ்சற்க வஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு
- குறள் 883 — உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்
- குறள் 884 — மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா வேதம் பலவுந் தரும்
- குறள் 885 — உறன்முறையா னுட்பகை தோன்றி னிறல்முறையா னேதம் பலவுந் தரும்
- குறள் 886 — ஒன்றாமை யொன்றியார் கட்படி னெஞ்ஞான்றும் பொன்றாமை யொன்ற லரிது
- குறள் 887 — செப்பின் புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதே யுட்பகை யுற்ற குடி
- குறள் 888 — அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு துட்பகை யுற்ற குடி
- குறள் 889 — எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு முட்பகை யுள்ளதாம் கேடு
- குறள் 890 — உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போ டுடனுறைந் தற்று