திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

சூது — அதிகாரம் 94

பொருட்பால் · அங்கவியல்

Gambling குடி கெடுக்கும் சூது

குறள்கள்

  1. குறள் 931 — வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று
  2. குறள் 932 — ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோ ராறு
  3. குறள் 933 — உருளாய மோவாது கூறிற் பொருளாயம் போஒய்ப் புறமே படும்
  4. குறள் 934 — சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின் வறுமை தருவதொன் றில்
  5. குறள் 935 — கவறுங் கழகமுங் கையுந் தருக்கி ரிவறியா ரில்லாகி யார்
  6. குறள் 936 — அகடாரா ரல்ல லுழப்பர் சூதென்னு முகடியான் மூடப்பட் டார்
  7. குறள் 937 — பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங் கழகத்துக் காலை புகின்
  8. குறள் 938 — பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ யருள்கெடுத் தல்ல லுழப்பிக்குஞ் சூது
  9. குறள் 939 — உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து மடையாவா மாயங் கொளின்
  10. குறள் 940 — இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப முழத்தொறூஉங் காதற் றுயிர்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural