திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

பேதைமை — அதிகாரம் 84

பொருட்பால் · அங்கவியல்

Folly அறியாமை

குறள்கள்

  1. குறள் 831 — பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண்டு ஊதியம் போக விடல்
  2. குறள் 832 — பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல்
  3. குறள் 833 — நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்
  4. குறள் 834 — ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையா ரில்
  5. குறள் 835 — ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந் தான்புக் கழுந்து மளறு
  6. குறள் 836 — பொய்படு மொன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்
  7. குறள் 837 — ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வ முற்றக் கடை
  8. குறள் 838 — மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன் கையொன் றுடைமை பெறின்
  9. குறள் 839 — பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட் பீழை தருவதொன் றில்
  10. குறள் 840 — கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural