திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

படை — அதிகாரம் 77

பொருட்பால் · அங்கவியல்

Army படைச் சிறப்பு

குறள்கள்

  1. குறள் 761 — உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாந் தலை
  2. குறள் 762 — உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத் தொல்படைக் கல்லா லரிது
  3. குறள் 763 — ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும்
  4. குறள் 764 — அழிவின் றறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை
  5. குறள் 765 — கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கு மாற்ற லதுவே படை
  6. குறள் 766 — மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற மெனநான்கே யேமம் படைக்கு
  7. குறள் 767 — தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்குந் தன்மை யறிந்து
  8. குறள் 768 — அடற்றகையு மாற்றலு மில்லெனினுந் தானை படைத்தகையாற் பாடு பெறும்
  9. குறள் 769 — சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையு மில்லாயின் வெல்லும் படை
  10. குறள் 770 — நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை தலைமக்க ளில்வழி யில்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural