திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

நட்பு ஆராய்தல் — அதிகாரம் 80

பொருட்பால் · அங்கவியல்

Choosing Friends நட்புக்கு யார் உரியவர்

குறள்கள்

  1. குறள் 791 — நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு
  2. குறள் 792 — ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரந் தரும்
  3. குறள் 793 — குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா வினனு மறிந்துயாக்க நட்பு
  4. குறள் 794 — குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் கொடுத்துங் கொளல்வேண்டு நட்பு
  5. குறள் 795 — அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய வல்லார்நட் பாய்ந்து கொளல்
  6. குறள் 796 — கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல்
  7. குறள் 797 — ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார் கேண்மை யொரீஇ விடல்
  8. குறள் 798 — உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க அல்லற்க ணாற்றறுப்பார் நட்பு
  9. குறள் 799 — கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை யுள்ளினு முள்ளஞ் சுடும்
  10. குறள் 800 — மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும் ஒருவுக வொப்பிலார் நட்பு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural