நாடு — அதிகாரம் 74
The Land நாடு
குறள்கள்
- குறள் 731 — தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச் செல்வருங் சேர்வது நாடு
- குறள் 732 — பெரும்பொருளாற் பெட்டக்கத் தாகியருங் கேட்டா லாற்ற விளைவது நாடு
- குறள் 733 — பொறையொருங்கு மேல்வரும்காற் றாங்கி யிறைவற் கிறையொருங்கு நேர்வது நாடு
- குறள் 734 — உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ் சேரா தியல்வது நாடு
- குறள் 735 — பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பு மில்லது நாடு
- குறள் 736 — கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டிற் றலை
- குறள் 737 — இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணு நாட்டிற் குறுப்பு
- குறள் 738 — பிணியின்மை செல்வம் விளைவின்ப மேம மணியென்ப நாட்டிற்கிவ் வைந்து
- குறள் 739 — நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு
- குறள் 740 — ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயனின்றே வேந்தமை வில்லாத நாடு