திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

மருந்து — அதிகாரம் 95

பொருட்பால் · அங்கவியல்

Medicine மருந்து

குறள்கள்

  1. குறள் 941 — மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர் வளிமுதலா வெண்ணிய மூன்று
  2. குறள் 942 — மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி யுணின்
  3. குறள் 943 — அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு பெற்றா னெடிதுய்க்கு மாறு
  4. குறள் 944 — அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து
  5. குறள் 945 — மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபா டில்லை யுயிர்க்கு
  6. குறள் 946 — இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங் கழிபே ரிரையான்க ணோய்
  7. குறள் 947 — தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி னோயள வின்றிப் படும்
  8. குறள் 948 — நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்
  9. குறள் 949 — உற்றா னளவும் பிணியளவுங் காலமுங் கற்றான் கருதிச் செயல்
  10. குறள் 950 — உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural