குறிப்பு அறிதல் — அதிகாரம் 71
Mind Reading குறிப்பு அறிதல்
குறள்கள்
- குறள் 701 — கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று மாறாநீர் வையக் கணி
- குறள் 702 — ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல்
- குறள் 703 — குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள் யாதுங் கொடுத்துக் கொளல்
- குறள் 704 — குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு.
- குறள் 705 — குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு ளென்ன பயத்தவோ கண்
- குறள் 706 — அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங் கடுத்தது காட்டு முகம்
- குறள் 707 — முகத்தின் முதுக்குறைந்த துண்டோஉவப்பினுங் காயினுந் தான்முந் துறும்
- குறள் 708 — முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி யுற்ற துணர்வார்ப் பெறின்.
- குறள் 709 — பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின் வகைமை யுணர்வார்ப் பெறின்
- குறள் 710 — நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற் கண்ணல்ல தில்லை பிற