கூடா நட்பு — அதிகாரம் 83
False Friends கூடாநட்பு
குறள்கள்
- குறள் 821 — சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு
- குறள் 822 — இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும்
- குறள் 823 — பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதன் மாணார்க் கரிது
- குறள் 824 — முகத்தி னினிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை யஞ்சப் படும்.
- குறள் 825 — மனத்தி னமையா தவரை எனைத்தொன்றுஞ் சொல்லினாற் றேறற்பாற் றன்று
- குறள் 826 — நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொல் ஒல்லை யுணரப் படும்
- குறள் 827 — சொல்வணக்க மொன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்
- குறள் 828 — தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா ரழுதகண் ணீரு மனைத்து
- குறள் 829 — மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று
- குறள் 830 — பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட் டகநட் பொரீஇ விடல்