இகல் — அதிகாரம் 86
Malice இகல்
குறள்கள்
- குறள் 851 — இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்
- குறள் 852 — பகல்கருதிப் பற்றா செயினு மிகல்கருதியின்னாசெய் யாமை தலை
- குறள் 853 — இகலென்னு மெவ்வநோய் நீக்கின் றவலில்லாத் தாவில் விளக்கந் தரும்
- குறள் 854 — இன்பத்து னின்பம் பயக்கும் மிகலென்னுந் துன்பத்துட் டுன்பங் கெடின்
- குறள் 855 — இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்குந் தன்மை யவர்
- குறள் 856 — இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை தவலுங் கெடலு நணித்து
- குறள் 857 — மிகன்மேவன் மெய்ப்பொருள் காணா ரிகன்மேவ லின்னா வறிவி னவர்
- குறள் 858 — இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை மிகலூக்கி னூக்குமாங் கேடு
- குறள் 859 — இகல்காணா னாக்கம் வருங்கா லதனை மிகல்காணுங் கேடு தரற்கு
- குறள் 860 — இகலானா மின்னாத வெல்லா நகலானாம் நன்னய மென்னுஞ் செருக்கு