அவை அறிதல் — அதிகாரம் 72
Knowing an Assembly அவை அறிதல்
குறள்கள்
- குறள் 711 — அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் றொகையறிந்த தூய்மை யவர்
- குறள் 712 — இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்
- குறள் 713 — அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉ மில்
- குறள் 714 — ஒளியார்முன் னொள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல்
- குறள் 715 — நன்றென் றெவற்றுள்ளு நன்றே முதுவருண் முந்து கிளவாச் செறிவு
- குறள் 716 — ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புல மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு
- குறள் 717 — கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச் சொற்றெரிய வல்லா ரகத்து
- குறள் 718 — உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று
- குறள் 719 — புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையு ணன்கு செலச்சொல்லு வார்
- குறள் 720 — அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்தர் அல்லார்முற் கோட்டி கொளல்