அமைச்சு — அதிகாரம் 64
Ministers நல்ல அமைச்சன்
குறள்கள்
- குறள் 631 — கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு மருவினையு மாண்ட தமைச்சு
- குறள் 632 — வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு
- குறள் 633 — பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு
- குறள் 634 — தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச் சொல்லலும் வல்ல தமைச்சு
- குறள் 635 — அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந் திறனறிந்தான் றேர்ச்சித் துணை
- குறள் 636 — மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை
- குறள் 637 — செயற்கை யறிந்தக் கடைத்து முலகத் தியற்கை யறிந்து செயல்
- குறள் 638 — அறிகொன் றறியா னெனினு முறுதி யுழையிருந்தான் கூறல் கடன்
- குறள் 639 — பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ்வ ரெழுபது கோடி தலை
- குறள் 640 — முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பா டிலாஅ தவர்