அதிகாரம் 126
நிறை அழிதல்
மானம் எனும் கதவினுக்கு மாட்டிவைத்த பூட்டை இன்று காமமெனும் கைச்சுத்தி கழற்றியதே என் தோழி காமம் எனும் நோய்வந்து கண்ணுக்குள் புகுந்து கொண்டு கண்ணுறங்க வீடாது கடிக்குதே இராவெல்லாம் எப்படிநான் மறைத்தாலும் எழுகின்ற காமமது தும்மல்போல் திடீரென்று தோன்றிடுதே என் செய்வேன் என்கணவர் பேசுகின்ற இனிப்பான மாய்மாலம் பெண்மை எனும் பண்புதனைப் பெயர்த்து எறிந்திடுதே விலகிநான் சென்றாலும் வேண்டாமிக் காமமென்று போகாதே என்றுசொல்லிப் புலம்பிடுதே என்னெஞ்சு
- வேற்கவிராயர்