அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
கள்ளைக் குடித்தால்தான் களிப்பு வரும் குடித்தவர்க்கு உள்ளமதில் நினைத்தாலே ஊறிவரும் காம இன்பம் எந்தவொரு வேளையிலும் இன்பந்தான் காமத்தால் உடல்உறவு கொண்டால்தான் உண்டாகும் என்பதில்லை தும்மல்வரும் போதெல்லாம் தும்மினேன் விழவில்லை நினைந்தவரின் உள்ளமதில் என்நெஞ்சம் பதியலையோ கணவனுடன் நான்சேர்ந்து கண்டசுகம் நினைவினிலே துன்பமெனும் கடலலையில் சோர்ந்து நான் மிதக்கின்றேன் வாழ்க நீ வெண்நிலவே வாராதே கண்முன்னால் வாராதிருக்கின்றார் வன்மையுள்ள என்கணவர்
- வேற்கவிராயர்