அதிகாரம் 120
தனிப்படர்மிகுதி
காதலிக்கப் பட்டவனும் காதலிக்கப் பட்டவளும் காமக்கனிநுகரக் காண்கின்றேன் எனக்கிலையே வாழ்வார்க்கு வரையாது வான் , மழையைக் கொடுப்பது போல் காதலன் கொடுக்கும் இன்பம் காதலிக்கே என்று சொல்லு விரும்புகிற நேரமெலாம் வீழ்வார் அமைந்துவிட்டால் முகமலர்ந்து இன்பமதில் மூழ்குவாள் - குலமகளும் ஒருதலையாம் காமமது ஒருநாளும் இனிக்காது இருவர்பால் இருந்தால்தான் இன்பத்தைப் பெறமுடியும் சொல்லாதே என்னெஞ்சே சோகமதைக் காதலர்க்கு துன்பக் கடல்தனையே தூர்த்துவிடு வாழ்வாய் நீ !
- வேற்கவிராயர்