அதிகாரம் 115
அலர் அறிவுறுத்தல்
எனக்கும் காதலிக்கும் இறுக்கமாம் நட்பதனை ஊரெல்லாம் தூற்றுவதால் உயிர் வாழ்ந்தோம் என்பாய் நீ மலர் போன்ற கண்ணுடையாள் மச்சினி என் காதலியின் அருமை தெரியாமல் அலர்செய்வார் இவ்வூரார் தூற்றுவார் தூற்றுவதால் சுடர்விடுதே காமமது சாடைசொல்வார் இல்லையெனில் தனித்தன்மை இழந்துவிடும் கள்ளுண்ணும் போதெல்லாம் களிப்பாகும் அதுபோல காமமெழும் போதெல்லாம் கள்வெறிதான் காதலர்க்கு சந்திரனை வாய்பிளந்து சர்ப்பந்தான் விழுங்கிடுமோ எங்களது காதலுந்தான் ஏசுவதால் மறைந்திடுமோ குறிப்பு : அலர் - அம்பலப் படுத்துதல் - விளம்பரப்படுத்துதல் . ரகசியமான ஒன்றை மக்களாய் பரவலாகப் பேசப்படுவது . களவியல் - களவு ஒழுக்கத்தின் நிலைப்பாடு . பழந்தமிழ்ச்சமுதாயத்தில் இந்த ஒழுக்கநெறி பரவலாக்கப் பின் பற்றியதாகத் தெரிகிறது . தமிழர் திருமணத்தில் தாலி என்ற பழக்கம் வருமுன்பு களவு ஒழுக்கம் பின்பற்றப்பட்டுள்ளது .
- வேற்கவிராயர்