அதிகாரம் 113
காதல் சிறப்புரைத்தல்
பாலோடு தேன்கலந்தாற் போலாகும் தேன்மொழியாள் வாய் ஊறும் உமிழ்நீரும் வாய் அமுதம் காதலர்க்கு . உடலோடு உயிர் சேர்ந்து ஒருருவம் ஆவதுபோல் என்நட்பும் அவள்நட்பும் இணைந்ததாம் ஓர் உருவம் கண்மணியின் பாவாய்நீ கண்ணைவிட்டு விலகியிரு காதலியை அங்குவைத்து காப்பாற்ற எண்ணுகிறேன் . கண்ணைநான் மூடுவதால் காதலர்தான் பயப்படுவார் என்றெண்ணி எப்போதும் இமைப்பத்தில்லை என் கண்ணை கண்ணுக்குள் இருக்கும் என் காதலன் வருத்தமுறா கண்ணிமைத்தல் இயல்பென்று கருதிடுவான் அறிவாளி . உள்ளத்தின் நீங்காது உறைந்திருக்கும் காதலரை இல்லைஎன்று சொல்லுவது எவன்கொலோ மற்றவர்கள் . குறிப்பு : உமிழ்நீர் என்பது எச்சில் . இது காதலர்களுக்கு தேன் போன்றது என்று சொன்னது மிகப்படுத்திக் கூறப்பட்டதாகும் . எச்சில் எச்சில்தான் . கருவாடு தின்பவன் , கருவாடு மணக்கிறது என்கிறான் . கள் குடிப்பவனுக்கும் அப்படித்தான் . காமத்தில் மூழ்கி இருப்பவனுக்கும் அப்படித்தான் . இவர்களுக்கு நன்மை தீமை தெரியாது . நல்லது கெட்டதும் தெரியாது .
- வேற்கவிராயர்