அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்
கண்டு கேட்டுண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணிடத்தில் உள்ளசுவைப் பெட்டகமாம் என்றுசொல்லு நோய்போக்க மருந்துண்டு நூறு இவள்தன் நோய்க்கு தானே மருந்தாவாள் தகையணங்கு என்றுசொல்லு குறுகுங்கால் குளிர்கிறது , அகலுங்கால் சுடுகிறது அணங்கிவளின் உடல்நெருப்பு அதிசயமாம் இவ்வுலகில் பிணங்குவதும் , பிணங்கிப்பின் கூடுவதும் முயங்குவதும் காமமது கொண்டவரின் களியாட்டம் என்றுசொல்லு காமம் மிகுந்துவரக் காதலியை நெருங்குங்கால் புதியதாம் அனுபவங்கள் பெறுகின்றேன் மடையன்நான் குறிப்பு : சுவைப்பெட்டகம் = சுவைகள் உள்ள பெட்டி - கண்டு மகிழ்தல் , கேட்டு மகிழ்தல் , உண்டு மகிழ்தல் , உடல்தழுவி மகிழ்தல் , நுகர்ந்து மகிழ்தல் ஆகிய ஐந்து இன்பங்களையும் ஒருசேர அனுபவிக்கும் இடம் பெண்தான் .
- வேற்கவிராயர்