அதிகாரம் 108
கயமை
கயவர் எனப்படுவார் காண்பதற்கு மனிதர்களாம் நடத்தை செயல்களிலே நாமவரைக் கண்டிடலாம் கவலையொன்றும் இல்லாமல் காரியங்கள் ஆற்றுவதால் கயவரும் ஒருவகையில் கனவானாம் என்றுசொல்லு தேவர்களுக் கொப்பாவார் தீயசெயல் கயவர்களும் ஏனென்றால் இருவருமேர் இஷ்டம் போல் மேய்ந்திடுவார் அறைபறையைப் போலாவார் அக்கயவர் மற்றவர்மேல் இல்லாத செய்திஎல்லாம் இட்டுக்கட்டிப் பறையடிப்பார் மற்றவர்கள் உண்பதையும் மனமகிழ்ந்து வாழ்வதையும் கண்டாலே வெதும்பிடுவார் கயவர்தான் என்றுசொல்லு
- வேற்கவிராயர்