அதிகாரம் 103
குடிசெயல் வகை
தன்குடும்பம் முன்னேற சளைக்காது உழைத்திடுதல் குடிசெயல் வகையாகும் குறளணங்கே தூது சொல்லு ஆராய்ந்து ஒருதொழிலை ஆர்வமுடன் செய்வதில்தான் கூடிவரும் செல்வத்தில் குடிஉயரும் என்றுசொல்லு தன்குடியின் நலம்பேணி தாளாது பணிசெய்வார் வேறொருவர் துணையின்றி வெற்றிகொள்வார் என்றுசொல்லு குறையென்றும் வாராமல் குடியோம்பி பணிசெய்வான் உடலோம்பல் தனைமறந்து உழைத்திடுவான் என்றுசொல்லு குற்றம் இலாதவனாய் குடியோம்பல் செய்வானை சொந்தம் எனச்சொல்லி துதிபாடும் ஊரெல்லாம் துன்பமெனும் காற்றுவந்தால் தூரோடு சாய்த்துவிடும் குடிஎன்னும் பெருமரத்தைத் தாங்குபவன் இல்லை என்றால்
- வேற்கவிராயர்