அதிகாரம் 98
பெருமை
நல்லெண்ம் நற்செயல்கள் நல்விளக்காம் பெருமைக்கு உள்ளமில்லார்க் கில்லையந்த ஒளிவிளக்கு என்றுசொல்லு பிறப்பால் மனிதரிலே பேதமில்லை என்றாலும் செய்தொழில் ஈனமென்றால் சிறப்பில்லை என்றுசொல்லு பெருமை உடையவரே பிழைசாரா வழிநின்று அருமை உடையசெயல் ஆற்றுவார் என்றுசொல்லு பெருமைக் குணமுடையார் பேணுவார் பணிவுதனை சிறுமைதான் தனைவியந்து சிலுசிலுப்பார் என்றுசொல்லு பெருமை மறைத்துவிடும் பிறருடைய குற்றமதை சிறுமைதான் தப்படித்து தண்டோரா போட்டிடுமாம் குறிப்பு : ஈனம் - இழிவு , கீழ்மை , பண்பின்மை , கேவலம் , குற்றம்
- வேற்கவிராயர்