அதிகாரம் 101
நன்றியில் செல்வம்
சேர்த்த பெரும்பொருளைத் தின்னாமல் மற்றவர்க்கும் உதவாதான் உணர்விருந்தும் உடல்செத்துப்போனவனே ஈட்டியநல் செல்வத்தால் இசைபெருக வாழாதார் பொறந்து நடமாடல் பூமிக்குப் பாரமதாம் தருமம்பல செய்யாமல் தானுமதைத் துய்க்காமல் வைத்திருப்பான் செல்வமது வறுமையாம் அவனுக்கே வறியார்க்கொன் றீயாதான் மாதனந்தான் முதிர்கன்னி மணவாழ்வு இல்லாமல் வயதடைந்தாள் போலாகும் . இல்லார்க்கு ஈயாத இவன்செல்வம் ஊருணியில் நச்சுநீர் நிறைந்ததுபோல் நன்மையில்லை என்றுசொல்லு குறிப்பு : நன்றியில் செல்வம் - உதவப்படாத செல்வம்
- வேற்கவிராயர்