அதிகாரம் 96
குடிமை
நற்குடியில் பிறந்தார்க்கு நற்பண்பு இயல்பாகும் பேசுவதும் செயல்பாடும் பெருமைபெறும் என்றுசொல்லு ஒழுக்கம் தவறாதார் ஒருபோதும் பொய்சொல்லார் நாணும் செயல்களுக்கு நாணுவார் குடிப்பிறந்தார் கோடிமேல் கோடிபணம் கொட்டியே கொடுத்தாலும் குற்றம் வரும் செயலெதையும் குடிப்பிறந்தார் செய்யாரே நாவினால் சிறுகுற்றம் நன்மக்கள் செய்தாலும் மலையளவாய்த் தோன்றுமது மற்றவரின் கண்களுக்கு நிலத்தின் வளமையினை நெற்பயிரே காட்டிவிடும் குலத்தின் பெருமையினை கூறும் சொல் காட்டிவிடும்
- வேற்கவிராயர்