அதிகாரம் 100
பண்புடைமை
இதமாக யாரிடமும் இன்முகத்தால் பேசுவதே பண்புடைமை ஆகுமென்று பறைசாற்றிச் சொல்வாயே ஆன்ற குடிப்பிறப்பும் அன்புடைமை இவ்விரண்டும் பண்புடைமை மாந்தர்க்கு பாரறியத் தூது சொல்லு நன்னெறியின் வழிநின்று நன்றிபல செய்பவரின் பண்புதனைத் தான்வியந்து பாராட்டும் இவ்வுலகு அரம்போலும் கூர்மையுள்ள அறிவுடையார் என்றாலும் மக்கட்பண் பில்லாதார் மரம் ஆவார் என்றுசொல்லு நட்பின் வகையறிந்து நயம்இல செய்வார்க்கும் நயம்பல செய்வதுதான் நற்பண்பு என்றுசொல்லு பண்பில்லான் பெற்றசெல்வம் பயனின்றிப் பாழாகும் தீங்கான பாத்திரத்தால் திரைந்துவிடும் பால்போல
- வேற்கவிராயர்