அதிகாரம் 95
மருந்து
வாதமும் பித்தமதும் வதைசெய்யும் சிலேத்துமமும் கூடினும் குறைந்திடினும் கொடுமையாம் உடலுக்கு செறிமானம் ஆன்பின்பு செலுத்தினால் உண்டியினை மருந்தொன்றும் வேண்டாவாம் மாந்தருக்கு என்றுசொல்லு சீரான நல்லுணவு சீரணந்தான் ஆனபின்பு அளவறிந்து உண்பாரேல் ஆயுளுந்தான் நீடிக்கும் வந்துள்ள நோய்தன்னின் வகைதொகையைக் கண்டறிந்து தேர்ந்த மருந்துகொண்டு செய்திடனும் வைத்தியத்தை மாறுபாடு செய்யாத மரக்கறியாம் உணவுண்டால் ஊறுபாடு வராது உடம்புக்கு என்றுசொல்லு உற்றான் உடல்நிலையும் உற்றபிணி யின்னளவும் கற்றான் மருத்துவனும் காலத்தால் செயல்நன்றாம்
- வேற்கவிராயர்