அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை
செயற்கரிய செயலெல்லாம் செய்யவல்ல பெரியோரை சேர்ந்து செயலாற்றல் சிறப்பாகும் என்று சொல்லு விஞ்ஞான மேதைகளை விலக்கிவைத்தல் கூடாது அரசாள்வார் யாருக்கும் அவர் சேவை அவசியமாம் அறிவுடைய பெரியோரின் அறிவுரைகள் கேட்டிடனும் படைவேண்டும் மன்னனுக்கு படையாகும் அவ்வுரைகள் அனல்பட்டு வெந்தாலும் ஆற்றலாம் நலம் பெறலாம் பெரியோரின் அனல் பட்டால் பெருங்கேடு உண்டாகும் பெரியாரைப் பிழைத்தொழுகின் பேரரசன் என்றாலும் நாட்டுக்கே கேடுவரும் நன்மையில்லை என்றுசொல்லு குறிப்பு : பிழையாமை = பகைத்துக் கொள்ளாமை , பேணிக் கொள்ளுதல் , சான்றோர் சொற்கேட்டல்
- வேற்கவிராயர்