அதிகாரம் 86
இகல்
இகல் என்னும் பேய்பிடித்தால் இணைந்திருக்க வீடாது ஒன்றுபட்டு வாழ்வோர்க்கு ஊறுசெய்யும் என்றுசொல்லு விரோதி எனநினைத்து வினையொருவன் செய்வானேல் பதிலுக்கு பதிலாக பழிநினைக்கக் கூடாது இகல் என்னும் துன்பமதை இல்லாமல் செய்திடுவார் இல்வாழ்வில் என்றென்றும் இன்பமுடன் வாழ்ந்திடுவார் பகைத்தீயை வளர்ப்பதினால் பலன்ஒன்றும் வாராது அணைப்பார் அதனை என்றால் அடைந்திடுவார் ஆக்கமெலாம் இகல் என்னும் பிணியின்றி இணக்கமுடன் நடப்பானேல் எல்லாரும் நட்பாகி எய்துவார் இன்பமெல்லாம்
- வேற்கவிராயர்