அதிகாரம் 84
பேதைமை
ஒரு மடங்கு பொருள்கொடுத்தால் இருமடங்கு கிடைக்குமென்று இருந்தபொருள் அத்தனையும் இழந்துவிடல் பேதைமையாம் பேதைமையுள் பேதைமையாம் பேராசை கொண்டொருவன் கிட்டாத பொருளுக்குக் கொட்டாவி கொள்வதுதான் பேதைமைச் செயல் செய்யும் பேதை ஒருவனும்தான் எழுபிறவி துன்பமதை இப்பிறவி சுமந்திடுவான் பேதைபெறும் செல்வமது பெற்றவனுக் காகாது தீயவர்க்கு ஆகுமந்தத் திருவெல்லாம் என்று சொல்லு பேதையார் கேண்மையது பெரிதினிது பிரிவின்கண் ஏனென்றால் அவராலே இடர்ஒன்றும் வாராது
- வேற்கவிராயர்