அதிகாரம் 85
புல்லறிவாண்மை
இன்மையுள் இன்மையதாம் எல்லார்க்கும் அறிவின்மை எந்தவொரு இன்மையதும் இதற்குநிகர் ஆகாது . அறிவிலார் ஒன்றீதல் அவர் அறிந்து செய்வதில்லை கொள்வார் தவப்பயன்தான் கொடுக்கும்படி செய்ததன்றோ அறிவிலார் தனக்கேதான் தந்திடுவார் துன்பமெல்லாம் பிறரொருவர் அவனுக்கு பீழை செய்யத்தேவையில்லை அருமறை உபதேசம் அறிவிக்கும் வழிதவறிச் செல்வானேன் தனக்குத்தான் தேடுவான் துன்பமெலாம் நல்லதெல்லாம் கெட்டதென்றும் கெட்டதெல்லாம் நல்லதொன்றும் புகலுவான் புத்தியில்லான் பேய் ஆவான் என்றுசொல்லு
- வேற்கவிராயர்