அதிகாரம் 89
உட்பகை
நிழல் நீர் இவ்விரண்டும் இன்பமும் துன்பமுமாம் உறவினர் என்பாரும் அவ்வாறே என்று சொல்லு உறவினர் ஒருசமயம் உதவிடுவார் மற்றுமந்த உறவினர் உள்ளிருந்தே உதைப்பாரும் உண்டாமே வாட்படைக்கு அஞ்சாத வன்மைமிகப் பெற்றவரும் உட்பகைக்கு அஞ்சுவதும் ஒடுக்குவதும் நன்றாகும் அரசனது கட்டளைக்கு அடங்காதார் பெருகிவிடில் அரசனது ஆட்சிக்கே அழிவு வரும் என்றுசொல்லு குணமில்லார் தம்மோடு கூடியே வாழ்வதுதான் கூண்டுக்குள் பாம்போடு குடியிருத்தல் போலாகும்
- வேற்கவிராயர்