அதிகாரம் 88
பகைத் திறம் தெரிதல்
பகை என்னும் பண்பேதான் பாதகமே செய்வதினால் விளையாட்டாய்க் கூட அதை விளைத்துவிடக் கூடாது வில்வீரன் அம்பைவிட சொல்வீரன் பகைகொடிதாம் நயமாகப் பேசியதை நட்பாக்கிக் கொளல் வேண்டும் கேட்காமல் உதவுவதே கேண்மைக்கு அழகாகும் சண்டையிட்டுக் களைத்தவர்க்கு சகஅரசன் துணைவரனும் முளைக்கையிலே அகற்றிடனும் முள்மரத்தை வீட்டுக்குள் விளையும் உட்புகையை வேரறுத்தல் நன்றாகும்
- வேற்கவிராயர்