அதிகாரம் 92
வரைவின் மகளிர்
பணத்திற்கே காமுறுவர் பண்பில்லா விலை மகளிர் இனிப்பான சொற்கள் எல்லாம் இழுக்காகும் என்றுசொல்லு இன்பமாய் வாழ்வதற்கு எத்தனையோ தொழில் இருக்க இழிவான தொழில்செய்யும் இவர்தொடர்பு வேண்டாமே பொருட்பெண்டிர் தன்னோடு போகந்தான் கொள்ளுவது இருட்டறையில் தெரியாத பிணந்தழுவல் போலாகும் வேசையரின் இல்லமதை விரும்புதல் செய்யாரே ஆய்ந்த அறிவுடையார் அதன்இழிவுக் கஞ்சுவரே கள்ளோடும் சூதோடும் கணிகையர்கள் தம்மோடும் சேர்ந்திருப்பார் தம்மை விட்டுத் திருமகள்தான் சென்றிடுவாள் குறிப்பு : வரைவின் மகளிர் - பொது மகளிர் - விலை மாதர்
- வேற்கவிராயர்