அதிகாரம் 114
நாணுத்துறவு உரைத்தல்
காமமெனும் தீயினிலே கருகிவரும் காதலன்தான் மடல் ஏறிச்சாவ தன்றி வழியில்லை என்றுசொல்லு காமத்தால் நைந்துள்ள கட்டுடம்பும் என்னுயிரும் நாணத்தை விட்டுவிட்டு நாடியதே மடலேறே மானந்தான் பெரிதென்று வாழ்ந்துவந்த நான் இன்று மானத்தை விட்டுவிட்டு மடல் ஏற ஆனேனே நான் கொண்ட நல்லாண்மை நாணமாம் ஓடமது காமமாம் கடல் நீரில் காற்றோடு செல்கிறதே கடலலை போல் காமது கரைபுரண்டு வந்தாலும் மடலேறாப் பெண்மைக்கு வாழ்த்துக்கள் என்றுசொல்லு காதலெனும் துன்பத்தில் கசிந்துருகும் எனைப்பார்த்து சிரிக்கின்றார் இத்துன்பம் தெரியாதார் என்றுசொல்லு குறிப்பு : மடல் ஏறுதல் = மடல் என்பது பனை மட்டையால் குதிரை உருவத்தில் செய்யப்பட்ட பொம்மைக் குதிரை . காதலித்த பெண்ணை மணக்கத் தடை ஏற்பட்டபோது காதலன் அந்தப் பொம்மைக் குதிரையில் ஏறி காதலியின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வதுதான் மடல் ஏறுதல் என்பது . காதலர் இருவர் பெயரையும் பெரிய அட்டையில் எழுதி , அதைக் கையில் உயர்த்திப்பிடித்துக் கொண்டு , ‘ காதல் வாழ்க ‘ என்று கூக்குரல் எழுப்புவது . அப்படி ஆர்ப்பாட்டம் செய்வதின்மூலம் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை . அக்காலத்தில் மடல்ஏறுதல் என்னும் பழக்கம் இருந்தது என்பதை அறியவும் .
- வேற்கவிராயர்